மாநகர கமிஷனர் ஆய்வு மருங்காபுரி ஒன்றியத்தில் 49 ஊராட்சியிலும் கொசு மருந்து

துவரங்குறிச்சி, நவ.30: மருங்காபுரி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. துவரங்குறிச்சி அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வளநாடு கைகாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மருங்காபுரி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய துணைச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கூட்டத்தில், கட்சியின் 2024 உறுப்பினர்கள் சேர்க்கை, தேர்தல் நிதி மற்றும் கட்சி செயல்பாடுகள் குறித்து திருச்சி புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி விளக்கி பேசினார். திருச்சி புறநகர் மாவட்டக்குழு உறுப்பினரும் அரசு போக்குவரத்துக் கழகம் ஏஐடியூசி சம்மேளன துணை பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் வாழ்த்தி பேசினார்.

கூட்டத்தில், 49 ஊராட்சிகளிலும் கொசு மருந்து அடிப்பது, அனைத்து பஞ்சாயத்துகளும் செவிலியர்கள் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரை வழங்குவது, கிராம சாலைகள் செப்பனிடுதல் பழுது பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஒன்றியச் செயலாளர் வெள்ளக்கண்ணு, ஒன்றிய துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் பெரியசாமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச்செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post மாநகர கமிஷனர் ஆய்வு மருங்காபுரி ஒன்றியத்தில் 49 ஊராட்சியிலும் கொசு மருந்து appeared first on Dinakaran.

Related Stories: