சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு திருச்சியில் உடற் தகுதி தேர்வு

திருச்சி, நவ.30: திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் எஸ்,ஐக்கான உடற்தகுதி தோ்வை நோ்மையான முறையில் நடத்துவது தொடா்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் 750 பணியிடங்களுக்கான எஸ்,ஐ., ஆண்,பெண் பதவிக்கான எழுத்துதோ்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இத்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான உடற்தகுதி தோ்வுகள் (பெண்கள் மட்டும்) திருச்சி மாநகர கே.கே.நகா் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த நவ.7,8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு பங்குபெற முடியாத நபா்கள் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து சம்மந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவின்படி உள்ள நபா்களுக்கு நேற்று, இன்றும் நடைபெறுகிறது. திருச்சி மாநகாில் பொது போட்டியாளா் 35 பேர், காவல்துறை ஒதுக்கீட்டில் 66 பேர் என மொத்தம் 101 பேர் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டது, இதில் பொது போட்டியாளா்கள் 33 பேர், காவல்துறை ஒதுக்கீட்டில் 53 பேர் என மொத்தம் 86 பேர் கலந்து கொண்டனர்.

உடற்தகுதி தோ்வில் கலந்து கொண்டவா்களிடம் நேற்று சான்றிதழ்கள் சாிபார்ப்பு, உயரம் சாிபார்த்தல், பின்னா் 1500 மீட்டா், 400 மீட்டா் ஓட்டம் என மொத்தம் 3 நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இன்று நீளம் தாண்டுதல், பந்து எறிதல், 100 மீட்டா் 200 மீட்டா் ஓட்டம் என 3 நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளது. உடற்தகுதி தோ்வில் போட்டியாளா்களின் நிகழ்வினை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் நோில் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின்போது திருச்சி சரக டிஐஜி பகலவன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரவிச்சந்திரன், மாநகர கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் விக்னேஷ்வரன் மற்றும் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா், கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு திருச்சியில் உடற் தகுதி தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: