கோயம்பேட்டில் குட்கா விற்ற பெண் உட்பட 2 பேர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியில் உள்ள கடைகளில் குட்கா விற்பனை செய்வதை கண்டுபிடித்து வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கம் செய்யவேண்டும் என்று போலீசார் அறிவித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.நேற்று, திருமங்கலம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள டீ கடையில் இன்ஸ்பெக்டர் சிபுகுமார் தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து அங்கு குட்கா விற்பனை செய்த கலைசெல்வி(43) கைது செய்து 6 கிலோ குட்காவை கைப்பற்றினர். இதுபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் பெட்டி கடையில் குட்கா விற்பனை செய்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்பாண்டி (25) கைது செய்து அவரிடம் இருந்து 7 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.

இதன்பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பெட்டி கடை, டீ கடைகளில் குட்கா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கோயம்பேடு போலீசார் மற்றும் உணவு பாது துறை அதிகாரிகள் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளோம். சமீபகாலமாக காவல் உயரதிகாரிகள் சோதனை நடத்தி பெட்டி கடை, டீ கடைகளில் குட்கா விற்பனை செய்கின்றவர்களை கைது செய்து வருகின்றனர்’ என்றனர்.

The post கோயம்பேட்டில் குட்கா விற்ற பெண் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: