தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு 2 புதிய வால்வோ பேருந்துகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு வழங்கப்பட்ட புதிய வால்வோ பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காகவும், அதேபோன்று சுற்றுலா பிரியர்களுக்கு தரமான சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 14 சுற்றுலா பேருந்துகள் பயான்பட்டில் உள்ளன.

இதன் தொடர்ச்சியாக தற்போது சுற்றுலா பயன்பாட்டிற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ரூ.2.92 கோடி மதிப்பில் 2 புதிய வால்வோ சொகுசுப் பேருந்துகளை சென்னையில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த பேருந்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 58 மாணவர்கள் இன்று மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

 

 

The post தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு 2 புதிய வால்வோ பேருந்துகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: