திரைப்படத்தில் காட்சிகள் மூலம் வன்முறைகளை விதைக்கக்கூடாது: மக்கள் சிந்தனை பேரவை தலைவர் வேண்டுகோள்

 

ஈரோடு, நவ.29: திரைப்படங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வன்முறை கலாச்சாரத்தை இளைஞர்கள் மனத்தில் விதைப்பது கவலை தரக்கூடியது என மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வேண்டுகோள் விடுத்தார். ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் மக்கள் சிந்தனை பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அப்பேரவையின் மாநில தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:
போதை பொருட்கள் பயன்பாட்டினால் உருவாகி வரும் சமூக சீர்கேடு குறித்து பொறுப்புள்ள குடிமக்கள் அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.

இளைஞர்கள், மாணவர்கள் இவற்றிற்கு எவ்வகையிலும் ஆட்படாமல் இருக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அத்திசை நோக்கி சிந்திக்கவும், செயல்படவும் மக்களை பொதுநோக்கில் சமூக உணவுர்வுடன் ஒருங்கினைப்பது இன்றைய காலத்தின் தேவையாகும். சமூகம் சார்ந்த, குடும்ப மேம்பாட்டினை வலியுறுத்தும் சில திரைப்படங்கள் வருவதை வரவேற்க வேண்டும். அதேசமயத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வன்முறை கலாச்சாரத்தை இளைஞர்கள் மனத்தில் விதைக்கும் சில திரைப்படங்கள் சமீபத்தில் வெளிவருவது கவலை தரக்கூடியது.

தமிழ்நாட்டில் துப்பாக்கி சத்தம் எங்கும் கேட்பதில்லை. அத்தைகைய சூழலில் சில திரைப்படங்களில் துப்பாக்கிகளே அதிகம் பேசுகிற காட்சிகள் வலுவான தாக்கத்தை உருவாக்கும் அளவு க்கு காட்டப்படுகின்றன. சாதி, மத பிரிவினைகள், அதனால் ஏற்படும் சச்சரவுகள், சண்டைகள் முழுமையாக தவிர்க்கப்பட வேண்டியவை. சகோதர சிந்தனை எல்லா இடங்களிலும் எல்லோர் மனங்களிலும் விதைக்கப்பட வேண்டியவை. இவ்வாறு ஸ்டாலின் குணசேகரன் பேசினார். இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பேரவையின் துணை தலைவர் பேராசிரியர் விஜயராமலிங்கம் வரவேற்றார். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி நன்றி கூறினார்.

The post திரைப்படத்தில் காட்சிகள் மூலம் வன்முறைகளை விதைக்கக்கூடாது: மக்கள் சிந்தனை பேரவை தலைவர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: