குட்கா விற்ற 4 பேர் கைது

ஊத்தங்கரை, நவ.28: ஊத்தங்கரை, கல்லாவி, சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி ஆகிய பகுதிகளில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த ஊத்தங்கரையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (40), கல்லாவி தாமோதரன் (28), சிங்காரப்பேட்டை அய்யந்துரை (28), சாமல்பட்டி பக்துலா (28) ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குட்கா நடமாட்டத்தை தடுக்க, அனைத்து பகுதிகளிலும், வரும் நாட்களில் ரோந்து பணி அதிகரிக்கப்படும்,’ என்றனர்.

The post குட்கா விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: