வெங்கடேச பெருமாள் கோயிலில் பவுர்ணமி கருட சேவை உற்சவம்: சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது

 

திருவள்ளூர்: திருவள்ளூர் வெங்கடேச பெருமாள் கோயிலில் பவுர்ணமி கருட சேவை உற்சவம் நடைபெற்றது. திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளை முன்னிட்டு கருட சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள் பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும். விஷ்ணு தளங்களில் கருடாழ்வார் பெரிய திருவடி என்று அழைக்கப்படுவார்.

இவர் பெருமாளின் வாகனமாகவும் கொடியாகவும் விளங்குவார். கருடன் மங்கள வடிவினன். எனவே கருட தரிசனம் செய்தால் பாப விமோசனம், நோய் அகலும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை தரிசித்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை தரிசித்தனர்.

The post வெங்கடேச பெருமாள் கோயிலில் பவுர்ணமி கருட சேவை உற்சவம்: சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: