கலைஞரை போல விளிம்புநிலை மக்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுக்கிறார்: உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் புகழாரம்

சென்னை: கலைஞரை போல விளிம்புநிலை மக்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுக்கிறார் என்று அகிலேஷ் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அவருடன் இணைந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட உத்திரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் மனைவி சீதா குமாரி ஆகியோரும் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தனர். சமத்துவம் என்பது அதிகார பரவலாக்கம் என்ற வி.பி.சிங் கருத்துக்கள் சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலராக கலைஞர் திகழ்ந்தார். வி.பி.சிங் சிலையை திறந்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. நாட்டின் புகழ்பெற்ற கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கலைஞரை போல விளிம்புநிலை மக்களுக்காக மு.க.ஸ்டாலின் குரல் கொடுக்கிறார். மக்கள் உரிமைக்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்தார்.

The post கலைஞரை போல விளிம்புநிலை மக்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுக்கிறார்: உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: