விதிமீறிய 13 வாகனங்களுக்கு ₹2.80 லட்சம் அபராதம்

 

கிருஷ்ணகிரி, நவ.26: கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆனந்தன், அன்புச்செழியன் ஆகியோர், ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோவில் என்ற இடத்தில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது தகுதி சான்று புதுப்பிக்காமல், காப்புச்சான்று, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல், சொந்த வாகனங்களை, வாடகை வாகனங்களாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறியதாக 13 வாகனங்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், அதன் உரிமையாளர்களுக்கு ₹2.80 லட்சம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், ‘மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களுக்கு, அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்படும். போக்குவரத்து விதி முறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும்,’ என்றனர்.

The post விதிமீறிய 13 வாகனங்களுக்கு ₹2.80 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: