எரு கொட்டியதில் தகராறு-4 பேர் கைது

வேப்பனஹள்ளி, நவ.26: வேப்பனஹள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்ராவ்(65). விவசாயியான இவர் தனது நிலத்தில் விவசாயத்திற்காக கோழி எருவை வாங்கி கொட்டி வந்துள்ளார். எரு கொட்டப்படுவதால் துர்நாற்றமும், ஈக்களின் தொல்லை அதிகமாவதாக, பக்கத்து நிலத்துக்காரர்களாகிய யானைக்கால்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியப்பா மகன் முருகேசன்(38), நாராயணப்பா மகன் சாம்ராஜ்(24), சுப்பிரமணி மகன் ராமராஜ்(26) மற்றும் ஜேடுகொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடப்பா மகன் குமரேசன்(28) ஆகியோர் பாஸ்கர்ராவிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றி கைகலப்பாக மாறி, பாஸ்கர்ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வேப்பனஹள்ளி போலீசில் புகாரளித்தார். புகாரின்பேரில் வேப்பனஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசன், சாம்ராஜ், ராமராஜ், குமரேசன் ஆகியோரை கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவித்தனர்.

The post எரு கொட்டியதில் தகராறு-4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: