அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திற்கு 340 மீட்டர் திரி 1000 லிட்டர் எண்ணெய் தயார்

 

குளித்தலை, நவ.26: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் இன்று கார்த்திகை தீபம் ஏற்ற 340 மீட்டர் திரி மற்றும் ஆயிரம் லிட்டர் தீப எண்ணெய் தயாராக உள்ளது. குளித்தலை அருகேயுள்ள அய்யர் மலையில் ரெத்தின கிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மகா தீபம் ஏற்றுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று 27ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றும் விழா நடைபெறுகிறது. இதையொட்டி இக்கோயில் மலை உச்சியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றப்படுகிறது.

இந்த மகா தீபத்திற்காக உபயதாரர்கள் மூலம் 340 மீட்டர் திரி மற்றும் ஆயிரம் லிட்டர் தீப எண்ணெய் பெறப்பட்டு தயாராக உள்ளது. கோவில் பணியாளர்கள் இன்று காலை அவற்றை எடுத்துச் சென்று மலை உச்சியில் உள்ள பிரத்யேக கொப்பரையில் 340 மீட்டர் திரி, ஆயிரம் லிட்டர் தீப எண்ணெய்யை ஊற்றி தயாராக வைத்திருப்பார்கள். மாலை 6 மணியளவில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.

தொடர்ந்து பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சி படிக்கட்டுகளில் கார்த்திகை தீபம் ஏற்றுவார்கள். பின்னர் கோயில் தெப்பக்குளம் சுற்றிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, இணை ஆணையர் குமரதுரை, செயல் அலுவலர் (பொ) அமரநாதன், மற்றும் உபயதாரர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திற்கு 340 மீட்டர் திரி 1000 லிட்டர் எண்ணெய் தயார் appeared first on Dinakaran.

Related Stories: