அன்னப்பிளவு குழந்தைகள் 26 பேருக்கு அறுவை சிகிச்சை

சேலம், நவ.25: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், உதடுபிளவு மற்றும் அன்னப்பிளவு பாதித்த 26 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத்துறை, குழந்தைகள் நல மருத்துவ பிரிவு, மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் சார்பில், உதடுபிளவு மற்றும் அன்னபிளவு பாதித்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் நடந்தது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் மணி தலைமை வகித்தார்.

மருத்துவ கண்காணிப்பாளர் தனபால், ஆர்எம்ஓ ஸ்ரீலதா, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 36 குழந்தைகள் வந்திருந்தனர். ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் குழந்தைகளை பரிசோதித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். மேலும், 24 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டது. அந்த குழந்தைகளின் பெயர், ஊர் விவரங்கள் பெறப்பட்டு, வரும் வாரங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

The post அன்னப்பிளவு குழந்தைகள் 26 பேருக்கு அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: