இந்திய அரசியல் அமைப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊத்தங்கரை, நவ.25: ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், இந்திய அரசியல் அமைப்பு தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராதிகா தலைமை வகித்தார். சார்பு நீதிபதி செந்தில்குமார் ராஜவேல், மாவட்ட உரிமையியல் நீதிபதி அமர்ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டு ேபசினர். நிகழ்ச்சியில் பெண் கல்வியின் அவசியம் குறித்தும், பெண்களுக்கான சட்டங்கள், இந்திய அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் கடமைகள், இளம் வயது திருமணம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்தும் விளக்கினர். நிகழ்ச்சியில் ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மூர்த்தி, துணைத்தலைவர் பிரபாவதி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கணேசன், பெண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியை ரீட்டா, ஆசிரியர்கள் ஷோபனா, தீபா, லாவண்யா, கீதா, வடிவி, அருள்மொழி, வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு லாவண்யா மற்றும் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post இந்திய அரசியல் அமைப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: