லால்குடியில் பள்ளி மாணவிகள் புத்தக வடிவில் அமர்ந்து வாசித்து விழிப்புணர்வு

 

லால்குடி, நவ.26: திருச்சியில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா குறித்து லால்குடி நகராட்சியில் சார்பில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் புத்தக வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு வழங்கினர். திருச்சியில் புத்தகத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி புத்தக திருவிழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் லால்குடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து லால்குடி நகராட்சி சார்பில் எல்என்பி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தக திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளிவளாகத்தில் நகராட்சி ஆணையர் குமார் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் துரை மாணிக்கம் தலைமையில் நடந்தது. மாணவிகள் கலந்து கொண்டு புத்தக திருவிழா விழிப்புணர்வு வழங்கும் வகையில் புத்தக வடிவில் அமர்ந்து ஒரு மணி நேரம் வாசிப்பு திறனை வெளிப்படுத்தினர்.

பள்ளி மாணவிகள் தினமும் வாசித்து தங்களுடைய அறிவுத்திறனையும், வாசிப்பு திறனை மேம்படுத்தி கொள்ள முன்வர வேண்டும். அனைவரும் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும், மேலும் பள்ளி மாணவிகள் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை பெற்றுக்கொண்டு வாசித்து திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் ஆணையர் குமார் வலியுறுத்தி பேசினார். இதில் பள்ளி தலைமையாசிரியர் நளினா, நகரமைப்பு ஆய்வர் ஜெய்சங்கர், துப்புறவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பள்ளி ஆசிரியைகள், பணியாளர்கள், கலந்து கொண்டனர்.

The post லால்குடியில் பள்ளி மாணவிகள் புத்தக வடிவில் அமர்ந்து வாசித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: