பெரம்பலூர், நவ.25: சேலத்தில் டிசம்பரில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், பெரம்பலூர் 4 ரோடு பகுதிக்கு வருகை தந்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை திமுக மாவட்டச் செயலாளர் குன்னம் இராஜேந்திரன், எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். டிசம்பர்-17ம் தேதியன்று சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் இரு சக்கர விழிப்புணர்வு வாகன பிரச்சார பேரணி தமிழகம் முழுவதும் நடை பெற்றுவருகிறது.
கலைஞர் மண்டலத்திற்கு நேற்று (24ம் தேதி) வருகை தந்த பேரணியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். அப்போது பெரம்பலூர் 4 ரோடு பகுதிக்கு வருகை தந்த பேரணியை பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் இராஜேந்திரன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர்.
இதில் மாநில நிர்வாகிகள் துரைசாமி, பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ் குமார், நல்லதம்பி, மதியழகன், ஜெகதீசன், ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.
கமல், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் கருணாநிதி,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவசங்கர், அப்துல்கரீம், சுப்ரமணியன், பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 4ரோடு முதல் புதுபஸ் ஸ்டாண்ட், பாலக்கரை, ரோவர் வளைவு, தேரடி, பெரிய கடைவீதி, பழைய பஸ் ஸ்டாண்ட், காமராஜர் வளைவு, புதுபஸ் ஸ்டாண்ட் 4 ரோடு வழியாக கடலூர் மாவட்டத்திற்கு பேரணி சென்றது.
The post சேலம் இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு திமுக இருசக்கர வாகன பேரணி: பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு, அமைச்சர் சிவசங்கர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.
