விரல் ரேகை பதிவாகாதவர்களுக்காக பிற நபர் மூலம் ரேஷன் பொருள் பெற 25,000 பேருக்கு அனுமதி

 

ஈரோடு,நவ.25: மாவட்டத்தில் பல்வேறு காரணங்களுக்கான பிற நபர் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க 25 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க, விரல் ரேகை பதிவு கட்டாயமாகும். வயதான முதியோர்கள், நடக்க முடியாதவர்கள், விரல் ரேகை பதிவு ஆகாதவர்களுக்கு, அவர்களால் நியமிக்கப்பட்ட பிற நபர் பொருளை வாங்க அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.

மாநில அளவில் ஈரோடு உட்பட 5 மாவட்டத்தில்தான் இது போன்ற பிரிவில் அதிகம் பேர் உள்ளனர். மாவட்டத்தில் 7.67 லட்சம் ரேஷன் கார்டுகளில் 25,000 கார்டுதாரர்களுக்கு பதிலாக வேறு நபர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளோம். கர்நாடகாவை ஒட்டிய மாவட்டம் என்பதால், பயனாளிக்கு சென்றடையாமல் ரேஷன் பொருட்கள் சட்டவிரோதமாக போய்விடக்கூடாது என்பதால் உண்மையாகவே ரேஷன் கடைக்கு வரமுடியாத நபர்களுக்கு மட்டும் இது போன்ற அனுமதி தருகிறோம். இவ்வாறு கூறினார்.

The post விரல் ரேகை பதிவாகாதவர்களுக்காக பிற நபர் மூலம் ரேஷன் பொருள் பெற 25,000 பேருக்கு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: