பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட்; சதம் அடித்து இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சாதனை.!

மெக்காய்:ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக்பாஷ் டி20 கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. மெக்காய் நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில்  மெல்போர்ன் ரெனிகட்ஸ்- சிட்னி தண்டர் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த மெல்போர்ன் அணி 5 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. இந்தியாவைச் சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுர் 81 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய சிட்னி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 54 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 114 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இதன் மூலம் பிக்பாஷ் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சிறப்பை மந்தனா பெற்றார். அதோடு  பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட் வரலாற்றில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக 2017-ம் ஆண்டில் மெல்போர்ன் ஸ்டார்சுக்கு எதிராக  அதிக ரன்கள் எடுத்தவரான ஆஷ்லி கார்ட்னெரின் (114 ரன்) சாதனையையும் சமன் செய்தார். இருப்பினும் மந்தனாவின் இந்த சாதனை சதம் சிட்னி அணிக்கு பலன் தரவில்லை….

The post பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட்; சதம் அடித்து இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சாதனை.! appeared first on Dinakaran.

Related Stories: