சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பான அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பான ரத்த பரிசோதனை, எக்கோ, எச்ஆர்சிடி சோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் முதுகு எலும்பு, வயிற்று வலி தொடர்பான சோதனைகளின் அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.