திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!!

சென்னை: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்கிரியில் பள்ளிகளுக்கு இன்று ( விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். ஆனால் கோவைக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். நெல்லை மாவட்டத்தில் மழையை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்க மாவட்ட ஆட்சி தலைவர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

அதிக மழை, பள்ளிகளில் மழைநீர் தேங்குதல், வகுப்பு நடத்த முடியாத சூழல் இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம் என்றும் விடுமுறை தொடர்பான தகவல்களை பள்ளிக்கல்வி அலுவலரிடம் தொலைபேசியில் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடியில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

The post திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: