இதையடுத்து, அரவிந்தன் ரூ.10 ஆயிரம் கட்டியுள்ளார். அதற்கு ரூ.13 ஆயிரத்து 800 கிடைத்துள்ளது. அதன்பிறகு அவர்கள் கூறியவாறு பல கட்டங்களைக் கடந்த அரவிந்தன், தனக்கு அதிக பணம் வரும் என்று ஆசையில் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் கட்டியுள்ளார். அதன் பிறகு தொடர்ந்து அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில்தான் தான் ஏமாற்றப்பட்டதை அரவிந்தன் உணர்ந்துள்ளார். இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அதிக வட்டி தருவதாக ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ரூ.2 லட்சத்தை இழந்த வாலிபர்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.
