ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: மோடி கடும் தாக்கு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பிரதமர் மோடி கடுமையாக சாடி உள்ளார். ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில், 199 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரசும், ஆட்சியை கைப்பற்ற பாஜவும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன. இதில் ஒருவருக்கொருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜ்சமந்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அசோக் கெலாட், சச்சின் பைலட் மோதலை முன்னிறுத்தி சாடினார்.

அவர் பேசும்போது, “ராஜஸ்தானில் உள்ள ஒரு குர்ஜார் சமூகத்தை நபர் அரசியலில் தனக்னெ ஒரு இடத்தை பிடிக்க போராடுகிறார். காங்கிரஸ் கட்சிக்காக அவர் உயிரையும் கொடுக்கிறார். ஆனால் அரச குடும்பம் ஆட்சிக்கு வந்ததும் குர்ஜார் நபரை பாலில் விழுந்த ஈ-யை தூக்கி போடுவது போல் போட்டு விடுகிறது. சச்சின் பைலட்டின் தந்தை ராஜேஷ் பைலட்டையும் இதேபோல் தான் காங்கிரஸ் நடத்தியது. குர்ஜார் இன மக்களை அவமதிப்பதையே காங்கிரஸ் நோக்கமாக கொண்டுள்ளது. ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இதுபோன்ற ஒரு அரசை நான் பார்த்ததில்லை” என்று தெரிவித்தார்.

The post ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: மோடி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: