நாடாளுமன்ற இணையதளத்தை எம்பிக்கள் நேரடியாக பயன்படுத்த வேண்டும்: மக்களவை செயலகம் வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்க உள்ள நிலையில், எம்பிக்கள் அவர்களுக்கான மக்களவை இணையதளத்தில் தங்களின் கேள்விகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மக்களவை செயலகம் வெளியிட்டுள் செய்திக்குறிப்பில், ‘எம்பிக்கள் மக்களவை இணையதளத்தின் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை அவர்களே நேரடியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். உதவியாளர்கள் மூலமாக பயன்படுத்தக் கூடாது. மேலும், எம்பிக்களின் கேள்விகளுக்கு அரசு தரப்பில் தரப்படும் பதிலின் ரகசிய தன்மையை காக்க வேண்டும். அவையில் கேள்வி நேரத்திற்கு முன்பாக இந்த பதில்களை வெளிப்படுத்தக் கூடாது’ என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மக்களவையில் அதானி குறித்து கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார். இந்த நிலையில் மக்களவை செயலகம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post நாடாளுமன்ற இணையதளத்தை எம்பிக்கள் நேரடியாக பயன்படுத்த வேண்டும்: மக்களவை செயலகம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: