கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் அருகே நின்று செல்ஃபி எடுக்கக் கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் அருகே நின்று செல்ஃபி எடுக்கக் கூடாது என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் அருகே நின்று செல்ஃபி எடுக்கக் கூடாது என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து ஆட்சியர் கிராந்திகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். குடிசைகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டடங்களில் பசிப்போர் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும். நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால் செல்ஃபி எடுக்கவோ, அருகில் செல்லவோ கூடாது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

The post கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் அருகே நின்று செல்ஃபி எடுக்கக் கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: