ஏற்காட்டில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஏற்காடு, நவ.23: ஏற்காட்டில் கடந்த நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால். காலை மற்றும் இரவு நேரத்தில் பொதுமக்கள் ஸ்வெட்டர், குல்லா அணிந்தபடியும், கம்பளி போர்த்தியபடியும் சாலைகளில் நடமாடுகின்றனர். இந்நிலையில், நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. அருகில் செல்வோர் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. இந்த பனிமூட்டத்திற்கிடையே அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. விட்டு, விட்டு பெய்த மழையால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். மலைப்பாதையில் சென்ற பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் முகப்பு விளக்கினை எரியவிட்டவாறு ஊர்ந்து சென்றன. தொடர் மழை, பனிமூட்டத்தால் கடந்த சில நாட்களாகவே ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. நேற்றும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர்.

The post ஏற்காட்டில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: