இந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு மனு அளித்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த அதிகாரிகள் சந்தேகம் அடைந்த நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் விருதுநகர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருப்பதி விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் தந்தை அருண்குமார், தாய் மகாலட்சுமி, குழந்தையை வாங்கிய திருச்சி செல்வம் (54), அவரது மனைவி சந்திரா (52), குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த திருச்சி நாகராஜ், கார் டிரைவர் சுப்பிரமணி ஆகிய 6 பேர் மீதும் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post சிவகாசி குழந்தை திருச்சியில் விற்பனை: தாய், தந்தை உட்பட 6 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.
