ஆலத்தூர் சீத்தாராமபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

 

பாடாலூர், நவ.22: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சீத்தாராமபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர்.சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். துணை இயக்குனர் டாக்டர்.நாராயணன், உதவி இயக்குனர் டாக்டர்.குணசேகர் முன்னிலை வகித்தனர். கீழமாத்தூர் ஊராட்சி தலைவர் சித்ரா ராஜேந்திரன் முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் சேகர், செல்வகுமார், இளையராஜா, முத்துச்செல்வம் கால்நடை ஆய்வாளர்கள் பிரபு, வசந்தா மற்றும் உதவியாளர்கள் சிகிச்சை அளித்தனர். முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் தாது உப்பு கலவை வழங்குதல் உள்ளிட்டவை அளிக்கப்பட்டது.

இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் பெற்றன. மேலும் 300 க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டது. மேலும் 200க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து சிறந்த கறவைப் பசு பராமரிப்பு விவசாயி 3 பேருக்கு, சிறந்த கிடேரி கன்று வளர்ப்புக்காக 3 பேருக்கு மண்டல இணை இயக்குனர் டாக்டர். சுரேஷ் கிறிஸ்டோபர் பரிசுகள் வழங்கினார். மேலும் லாபகரமான முறையில் கறவை பசு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு பற்றியும் மற்றும் பசுந்தீவன வளர்ப்பு பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மங்களம் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியும், 300க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசியும் போடப்பட்டது.

The post ஆலத்தூர் சீத்தாராமபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: