இது குறித்து பம்மல் சங்கர்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 பைக்கில் வந்த 4 பேர் கடை ஷட்டர்களின் பூட்டுகளை இரும்பு கம்பிகளால் உடைத்து உள்ளே சாவகாசமாக சென்று, மின் விளக்குகளை எரியவிட்டவாறு, கல்லா பெட்டியில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றது பதிவாகியிருந்தது.
கடையில் இருந்து புறப்பட்டு செல்லும் முன்பு கடையில் விற்பனைக்காக வைத்திருந்த விலை உயர்ந்த முந்திரி, பாதாம் பருப்புகளையும் விட்டு வைக்காமல் திருடிச்சென்றதும் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
கடந்த 6 மாதத்திற்கு முன்பும் இதுபோன்று சிவகேசன் கடையில் ₹50,000 கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது. அந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாதநிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதனிடையே, சிவகேசன் கடையில் கொள்ளையர்கள் திருடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The post பல்லாவரம் அருகே எண்ணெய் கடையில் ₹80,000 கொள்ளை: சிசிடிவி காட்சிகள் வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.
