பப்புவா நியூ கினியில் எரிமலை வெடிப்பு: ஜப்பான் கடலோரப் பகுதிகளில் சுனாமி ஏற்படுமா என்று ஆய்வு

பப்புவா நியூ கினியா: தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டில் எரிமலை வெடித்ததால் ஜப்பான் நாட்டின் கடற்கரை பகுதிகளில் சுனாமி ஏற்படும் சூழல் உள்ளதா என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ஆய்வு நடத்தி வருகிறது. பப்புவா நியூ கினியா தீவில் உள்ள மவுண்ட் உலாவுன் எரிமலை பிற்பகல் 3.30 மணியளவில் வெடித்ததாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சீற்றத்துடன் வெடித்த எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் நிற புகை சுமார் 50 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் எழும்பியதாகவும் தெரிவித்துள்ளது. எரிமலை வெடித்துள்ளதால் ஜப்பான் கடலோர பகுதிகளில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதா என ஆய்வு நடத்திவரும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுனாமி ஏற்படும் பட்சத்தில் ஈசு மற்றும் யுகசபாரா தீவுகள் முதலில் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள போதும் கடலில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி கண்காணிக்கும் மிதவைகளில் எவ்வித மாற்றமும் தெரியாததால் சுனாமி பேரலை எழுவதற்கான வாய்ப்புள்ளதா என கூற முடியவில்லை என தெரிவித்துள்ளது. பப்புவா நியூ கினியா அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் ஆஸ்திரேலிய வானிலை மையமும் எவ்வித சுனாமி எச்சரிக்கையும் வெளியிடவில்லை.

The post பப்புவா நியூ கினியில் எரிமலை வெடிப்பு: ஜப்பான் கடலோரப் பகுதிகளில் சுனாமி ஏற்படுமா என்று ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: