சென்னை நதிகளை சுத்தம் செய்ய புதிய நிறுவனம்: தமிழ்நாடு அரசு துவங்கியது

சென்னை: சென்னையில் உள்ள நதிகளை சுத்தம் செய்யும் வகையில் சிஆர்டிசி என்ற புதிய நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலின்படி அடையாறு நதியை மீட்க சென்னை நதிகள் மாற்றும் நிறுவனம் (சிஆர்டிசி) என்ற புதிய நிறுவனத்தை அரசு உருவாக்கலாம். அடையாறு உள்பட நகரின் மூன்று முக்கிய நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் 2006ல் உருவாக்கப்பட்ட சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளை (சிஆர்ஆர்டி) அறிவித்த திட்டங்களை செயல்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதை ஏற்று இந்த நிறுவனம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

மாநில முனிசிபல் நிர்வாகத் துறை ஆற்றை மீட்டெடுப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (டிஎப்ஆர்) தயாரித்து, இதை சரிசெய்ய ஜூலை மாதம் டெண்டர் விடப்பட்டது. இதில், மூன்று சர்வதேச நிறுவனங்கள் உள்பட 19 ஏலதாரர்கள் பங்கேற்றனர். சிஆர்டிசிக்கு அரசு ஒப்புதல் அளித்து, பணியாளர்களை நியமித்தவுடன் பணிகள் தொடங்கும். அரசு மூலம் உருவாக்கப்படும் இந்த புதிய நிறுவனம், ஆற்றங்கரை பராமரிப்பு, நடைபாதைகள் அமைத்தல், சைக்கிள் டிராக்குகள், வாகன நிறுத்துமிடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும்.

மேலும், 2018ல் தொடங்கப்பட்ட அடையாறு நதி மறுசீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பிற மாநில நிறுவனங்கள், 80 சதவீதத்துக்கும் அதிகமான பணிகளை முடித்து விட்டதாக தீர்ப்பாயத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 522 டன்களுக்கும் அதிகமான திடக்கழிவுகள் ஆற்றங்கரைகளில் இருந்து அகற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 3 பாலங்களை அழகுபடுத்தும் பணியும், கோட்டூர்புரம், மறைமலைநகர், ஜாபர்கான்பேட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. கழிவுநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் குப்பை தொட்டிகள் அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான் சென்னையில் உள்ள ஆறுகளை சுத்தம் செய்யும் பொருட்டு சென்னையில் நதிகளை மொத்தமாக மாற்றும் நிறுவனம் எனப்படும் சிஆர்டிசி என்ற புதிய நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

* மாநில முனிசிபல் நிர்வாகத் துறை ஆற்றை மீட்டெடுப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (டிஎப்ஆர்) தயாரித்து, ஜூலை மாதம் டெண்டர் விடப்பட்டது.
* 3 சர்வதேச நிறுவனங்கள் உள்பட 19 ஏலதாரர்கள் பங்கேற்றனர்.
* சிஆர்டிசிக்கு அரசு ஒப்புதல் அளித்தது. பணியாளர்களை நியமித்தவுடன் பணிகள் தொடங்கும்.
* ஆற்றங்கரை பராமரிப்பு, நடைபாதை அமைத்தல், சைக்கிள் டிராக்குகள் உள்ளிட்ட திட்டங்களை இது செயல்படுத்தும்.

The post சென்னை நதிகளை சுத்தம் செய்ய புதிய நிறுவனம்: தமிழ்நாடு அரசு துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: