அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் 56% வாக்குகளுடன் ஜேவியர் மிலே வெற்றி

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரி ஆதரவாளரான ஜேவியர் மிலே 55.8% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அர்ஜென்டினாவில் அதிபர் ஆல்பெர்டோ பெர்னாண்டஸின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அங்கு அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று போட்டி கடந்த மாதம் 22ம் தேதியும், 2வது சுற்று போட்டி நேற்றும் நடந்து முடிந்தன.
தற்போதைய ஆட்சியில் பொருளாதாரத் துறை அமைச்சராக இருக்கும் செர்ஜியோ மாசா ரினீயூவல் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சுதந்திர கட்சியின் சார்பில் ஜேவியர் மிலே களம் இறங்கினார்.

தீவிர வலதுசாரி ஆதரவாளரான ஜேவியர் அரசு துறைகளின் எண்ணிக்கையைக் குறைத்து பணவீக்கத்தை கட்டுப் படுத்துவதாகவும் உறுதியளித்தார். இந்நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஜேவியர் மிலே 55.8% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பொருளாதார அமைச்சரான செர்ஜியோ 44.2% வாக்குகள் மட்டுமே பெற்றார். ஜேவியரின் வெற்றி, அர்ஜென்டினா 1983-ம் ஆண்டு ஜனநாயக நாடாக மாறிய பிறகு, நடத்தப்பட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளையும் மீறிய மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

 

The post அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் 56% வாக்குகளுடன் ஜேவியர் மிலே வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: