மைசூர் பாக்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கப்
எண்ணெய் – 3/4 கப்
நெய் – 3/4 கப்
சர்க்கரை – 1 கப்
தண்ணீர் 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் ஒரு வாணலியில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி லேசாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் பாதியை ஒரு பௌலில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின் மீதமுள்ள பாதி எண்ணெய் நெய் கலவையை கடலை மாவில் ஊற்றி கட்டிகளின்றி நன்கு மென்மையாக கலந்து கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு அகலமான வாணலியில் 1 கப் சர்க்கரை மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி கலந்து, அடுப்பில் வைத்து சர்க்கரையை கரைக்க வேண்டும். சர்க்கரை கரைந்ததும், குறைவான தீயில் வைத்து, சர்க்கரை கம்பி பதத்திற்கு வரும் வரை சூடேற்ற வேண்டும்.
சர்க்கரை பாகு கம்பி பதத்திற்கு வந்ததும், அதில் கரைத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து நன்கு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.கடலை மாவானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் எடுத்து வைத்துள்ள எண்ணெய் நெய் கலவையை ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி விட வேண்டும்.கடலை மாவை வாணலியில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, மீண்டும் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.இறுதியாக ஒரு பாத்திரத்தில் நெய்யை தடவி, அதில் இந்த கடலை மாவை ஊற்றி பரப்பி, 1 மணிநேரம் குளிர வைக்க வேண்டும்.அதன் பின் கத்தியால் அதை துண்டுகளாக்கினால், சுவையான நெய் மைசூர் பாக் தயார்.

The post மைசூர் பாக் appeared first on Dinakaran.