லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்: குமாரசாமிக்கு முதல்வர் சித்தராமையா சவால்

பெங்களூரு: மைசூரு மாவட்டம் கீலனபுராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட யதீந்திரா, அங்கிருந்து கொண்டு அவரது தந்தையும் முதல்வருமான சித்தராமையாவிடம் செல்போனில் பேசிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் ஆட்சி அதிகாரத்தில் யதீந்திரா தலையிடுவதை காட்டுவதுடன், பணியிட மாற்றங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் லஞ்சம் பெறுவதையும் உறுதிப்படுத்துவதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியிருந்தார். யதீந்திரா சூப்பர் முதல்வராக செயல்படுகிறார். முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் குமாரசாமி விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முதல்வர் சித்தராமையா கூறுகையில், ’குமாரசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து என்னிடம் கேட்காதீர்கள். அவரது ஆட்சிக்காலத்தில் நடந்ததைத்தான் அவர் டிவீட் செய்துவருகிறார். அவர்கள் ஆட்சியில் தான் பணியிட மாற்றங்களுக்கு லஞ்சம் பெறப்பட்டதே தவிர, எங்கள் ஆட்சியில் இல்லை. ஒரேயொரு பணியிட மாற்றத்துக்கு நான் லஞ்சம் பெறப்பட்டதாக நிரூபித்தால் கூட அரசியலில் இருந்தே விலகிவிடுகிறேன். ’ என்று கூறியுள்ளார்.

The post லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்: குமாரசாமிக்கு முதல்வர் சித்தராமையா சவால் appeared first on Dinakaran.

Related Stories: