கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட சிறப்பு சேர்க்கை முகாம்

 

பெரம்பலூர், நவ.19: கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட சிறப்பு சேர்க்கை முகாம் வருகிற 22ம் தேதிவரை நடைபெறுகிறது என்று ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டமானது (ஆர்பிஎல்ஐ) மத்திய அரசு நேரடியாக அஞ்சல்துறை மூலமாக நடத்தும் நலத் திட்டமாகும். கிராமப்புற வாழ் மக்கள் நல மேம்பாட்டிற்கனவே பிரத்யேகமானது கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம். (ஆர்பிஎல்ஐ) இந்தத் திட்டத்தில் கிராமப் புறங்களில் வசிக்கும் 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் சேரலாம்.

இதில் குறைவான பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. அதிகமான போனஸ் தொகை வழங்கப் படுகிறது. இதில் இணைந்து பயன்பெற வயது சான்று, முகவரி சான்று, அடையாள சான்று, பான் எண், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற ஆவணங்கள் தேவைப்படும். ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துணை மற்றும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் இந்த திட்டங்களில் சேர்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 22ம் தேதி வரை நடை பெறுகிறது.

எனவே இந்த திட்டத்தில் தகுதியான பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்கண்ட திட்டத்தில் ஏற்கனவே இணைந்து தொடர முடியாமல் விடுபட்ட பாலிசிதாரர்கள், அபராத தொகையில் தள்ளு படியுடன் புதுப்பித்துக் கொள்ள, நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. இந்த வாய்ப்பை விடுபட்ட பாலிசிதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

The post கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட சிறப்பு சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: