மேற்குவங்க மத்திய பல்கலை. வேந்தராக பிரதமர் மோடிதான் இருக்கிறார்: நயினாருக்கு அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி பதில்..!!

சென்னை: மேற்குவங்க மத்திய பல்கலை. வேந்தராக பிரதமர் மோடிதான் இருக்கிறார் என நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி பதிலளித்துள்ளனர். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர்கள்,

குஜராத்தில் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் முறையை பாஜகதான் கொண்டு வந்தது: அமைச்சர் ரகுபதி

கல்வி பொதுப் பட்டியலில் இருக்கின்ற காரணத்தினால்தான் நீட் விலக்கு கோரி மசோதா அனுப்பினோம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் முறையை பாஜகதான் கொண்டு வந்தது.
ஆளுநர் அரசியல் செய்யும் நபர் இல்லை, ஆனால் அவர் அரசியல் செய்யும் நபராக இருப்பதால்தான் எதிர்ப்பு வருகிறது. ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

மத்திய பல்கலை.க்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் தான் வேந்தராக உள்ளார்: அமைச்சர் பொன்முடி

மேற்குவங்கத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்தான் வேந்தராக உள்ளார் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர்தான் இருக்க வேண்டும். தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத்தில் மாநில முதலமைச்சர் பரிந்துரைக்கும் நபரைத்தான் துணைவேந்தராக நியமிக்க முடியும்.

 

 

The post மேற்குவங்க மத்திய பல்கலை. வேந்தராக பிரதமர் மோடிதான் இருக்கிறார்: நயினாருக்கு அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி பதில்..!! appeared first on Dinakaran.

Related Stories: