அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிப்பு: சிகிச்சையை தொடங்கிய மருத்துவர்கள்..!!

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதால் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர். உடல்நலக்குறைவால் சென்னை ஒமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். வயிற்றுப்புண் மற்றும் குடல்புண் காரணமாக சிறப்பு குழுவினர் காலையிலேயே சிகிச்சையை தொடங்கினர். அனைத்து பரிசோதனை முடிவுகளும் கிடைத்த பிறகு சிகிச்சையை தொடர்வதா என்பதை மருத்துவக் குழு முடிவு செய்யும். உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பான ரத்த பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து அதிகமாக இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்டதில் பித்தப்பையில் கல் உள்ளது உறுதியானது. பித்தப்பை கல்லை கரைப்பதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர். வயிற்றுப்புண், குடல் புண் காரணமாக சிறப்புக் குழு பரிசோதனை மேற்கொண்டதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜூன்14ல் கைதான செந்தில் பாலாஜிக்கு ஜூன்22இல் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிறையில் உள்ள செந்தில்பாலாஜி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நரம்பியல் மருத்துவர்களும் அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி சில பரிசோதனைகள் வெளியில் இருந்து எடுக்கப்பட உள்ளது. நரம்பியல் தொடர்பான அதிநவீன பரிசோதனைகள் மேற்கொள்ள இருப்பதாக மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிப்பு: சிகிச்சையை தொடங்கிய மருத்துவர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: