அறநிலையத்துறை சார்பில் பெரம்பலூர் கோயிலில் இலவச திருமணம்

 

பெரம்பலூர்,நவ.17: பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஒரு ஜோடிக்கு எம்எல்ஏ தலைமையில் இலவச திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இலவச திருமண திட்டத்தின் கீழ், ஒவ்வொரு முக்கிய கோவிலிலும் ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி நேற்று 16ம் தேதி பெரம்பலூர் மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசாமி கோயிலில் ஒரு தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் தலைமையில் அறநிலையத்துறை உறுப்பினர் தழுதாழை பாஸ்கர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதது.  புது மணதம்பதிக்கு அறநிலை துறை சார்பாக கட்டில், மெத்தை, வீட்டுக்குத் தேவையான பாத்திரங்கள், விளக்குகள் என சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை, எம்.எல்.ஏ பிரபாகரன் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியின் போது அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமணன், கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் கோவில் ஊழியர்கள் உடனிருந்தனர்.

The post அறநிலையத்துறை சார்பில் பெரம்பலூர் கோயிலில் இலவச திருமணம் appeared first on Dinakaran.

Related Stories: