சொல்ல வேண்டிய மந்திரம் :
இது தவிர கந்தகுரு கவச்சத்தில் முருகனின் மூல மந்திரம் உள்ளது. இதை தொடர்ந்து உச்சரித்து வந்தால் அத்தனை விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடலாம். இந்த மந்திரத்தை எத்தனை முறை உச்சரிக்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். ஒரு லட்சம் முறை உச்சரித்தால் நினைத்த காரியங்கள் அப்படியே நடக்கும். யம பயம் நீங்கும். கோடி முறை உச்சரித்தால் முக்தி கிடைக்கும். முருகப் பெருமானே நமக்கு நேரில் ஜோதி வடிவமாக நமக்கு காட்சி தருவார் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
“ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லெளம் ஸெளம் நமஹ”
என்ன பலன் கிடைக்கும் ?
இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கு அமர்ந்த உச்சரிக்க வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் உள்ளரிப்பது பல மடங்கு சிறப்பான பலனை தரும். அப்படி முடியாதவர்கள் மாலை நேரத்தில் விளக்கேற்றி வைத்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் முருகனுக்கு விரதம் இருந்து இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால், வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
The post முருகன் மூல மந்திரம் appeared first on Dinakaran.
