விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க நடப்பு 2023-2024ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு 22.11.2023 வரை நீட்டிப்பு

சென்னை: விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க நடப்பு 2023-2024ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு 22.11.2023 வரை நீட்டிக்கபட்டுள்ளது. இதுவரை சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்ய தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க. விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர்முயற்சியால் சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 22.11.2023 வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

எனவே, சனி (18.11.2023) மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் (19.11.2023) பொது சேவை மையங்கள் செயல்படுவதால் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 22ஆம் தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

The post விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க நடப்பு 2023-2024ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு 22.11.2023 வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: