ஈரோடு பள்ளியில் ஆர்பிஎப் போலீசார் விழிப்புணர்வு

 

ஈரோடு, நவ.15: ஈரோடு காளைமாட்டு சிலை அருகே உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆர்பிஎப் (ரயில்வே பாதுகாப்பு படை) போலீசார் மூலம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு ஆர்பிஎப் எஸ்ஐக்கள் அனில்குமார் ரெட்டி, கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ரயில் தண்டவாள பாதைக்கு அருகே விளையாடக்கூடாது. ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது இருபுறமும் ரயில்கள் வருகிறதா? என்பதை உறுதி செய்து கடக்க வேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து திண்பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது. கவனமுடன் பாடங்களை கற்க வேண்டும். ஆசிரியர் கற்று கொடுக்கும் பாடங்களை கவனிக்க வேண்டும். கவனத்தை சிதற விடக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். தொடர்ந்து குழந்தைகள் தின விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இந்நிகழ்ச்சியின்போது, பள்ளியின் தலைமையாசிரியை ஜெயா உடன் இருந்தார்.

The post ஈரோடு பள்ளியில் ஆர்பிஎப் போலீசார் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: