சென்னை ஐகோர்ட்டில் கட்டுப்பாடுகள் தளர்வு

சென்னை:  கொரோனா காரணமாக தமிழ்நாடு அரசு மாநிலம் முழுதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதை பின்பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டு, சுமார் ஒன்றரை வருட காலத்துக்கும் மேலாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.  இதனால், உயர் நீதிமன்றத்தில் அனைத்து  வழக்குகளும் காணொலி மூலமாக நடத்தப்பட்டன. நீதிபதிகள் முன்பு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் நேரில் ஆஜராகி வழக்குகளை நடத்திவந்தனர். கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன், படுக்கை வசதி வழக்குகள், சட்டமன்ற தேர்தல் தொடர்பான வழக்குகள், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் உள்ளிட்ட முக்கிய வழக்குகளும் காணொலியில் நடத்தப்பட்டன. இந்நிலையில் காணொலியில் ஆஜராவது சிரமமாக இருப்பதாக வழக்கறிஞர் சங்கங்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளையும், கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதையும் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் கடந்த வெள்ளிக்கிழமையன்று  கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றறிக்கை வெளியிட்டார்.அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் விதித்த அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், அவர்களின் உதவியாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள அதேநேரம், வழக்கறிஞர் சங்கங்கள், அலுவலக அறைகள், நூலகங்கள் ஆகியவையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன….

The post சென்னை ஐகோர்ட்டில் கட்டுப்பாடுகள் தளர்வு appeared first on Dinakaran.

Related Stories: