குரோஷியாவின் ரீமாக் நிறுவனத்தின் நெவேரா கின்னஸ் சாதனை: முன்னோக்கி சென்றால் 412 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும்

ஜெர்மனி: ரீமாக் நிறுவனம் தயாரித்துள்ள நெவேரா ஸ்போர்ட்ஸ் கார் பின்னோக்கி செல்வதில் உலக சாதனை படைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ஒரு காரை பின்பக்கமாக எத்தனை வேகமாக ஓட்டிவிடமுடியும் மிக திறமையானவர் என்றாலும் கூட குறிப்பிட்ட வேகத்தை தாண்டி அந்த காரை ஓட்டிவிட முடியாது.

அனல் பின்னோக்கி செல்வதில் இதுவரை இருந்த அத்தனை சாதனைகளையும் முறியடித்துள்ளது குரோஷியா நாட்டின் ரீமாக் நிறுவனத்தின் நெவேரா கார் பாக்டரியில் இயங்கும் இந்த எலக்ட்ரிக் கார் மணிக்கு 275 கிலோ மீட்டர் வேகத்தில் பின்பக்கமாக சென்று காண்போரை மிரட்சியடைய வைத்துள்ளது. ஜெர்மனியில் உள்ள பேபண்பார்க் நகரில் இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

நெவேரா கார் உலகின் அதிவேகமான கார் என்ற சாதனையை ஏற்கனவே படைத்துள்ள நிலையில் வித்தியாசமானதாக ஏதேனும் செய்ய ரீமாக் நிறுவனத்தினர் தீர்மானித்தனர். அதை தொடர்ந்து பின்னோக்கி செல்வதில் உலக சாதனை படைப்பதற்கான காரை உருவாகும் பணியில் இறங்கினர். இதை கேள்விப்பட்ட மற்றவர்கள் கேலி செய்தபோதும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

ரீமாக் நிறுவனத்தின் நெவேரா கார் கீயர் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாக்டரி காருக்கு 4 என்ஜின்கள் உள்ளன. சர்பேஸ் மௌண்டன் மாக்னெட் மோட்டார்கள் மூலம் இயங்கும் காரின் 4 சக்கர ட்ரான்ஸ் மிஷன் 1914 ஹார்ஸ் பவர் கொண்டதாகும். இதன் மூலம் பின்னோக்கி மட்டுமல்லாது முன்னோக்கி 412கிலோ மீட்டர் வேகத்தில் இந்த கார் சீரிப்பாய கூடியது.

The post குரோஷியாவின் ரீமாக் நிறுவனத்தின் நெவேரா கின்னஸ் சாதனை: முன்னோக்கி சென்றால் 412 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் appeared first on Dinakaran.

Related Stories: