தொடர்ந்து பிரிமீயம் டாஸ்க், லக்கி பர்சன், விஐபி கஸ்டமர் போன்ற ஆசை வார்த்தைகளை கூறி அதிக தொகையை செலுத்தினால் அதிக லாபம் பெறலாம் என கூறி டெலிகிராம் குரூப்பில் இணைய செய்கின்றனர். குரூப்பில் இணைந்தவுடன் அதில் பல முதலீட்டாளர்கள் உள்ளது போன்று அவர்கள் நிறைய லாபம் பெற்றது போன்று போலி தகவல்களை அளித்து முதலீடு செய்ய தூண்டுகின்றனர். பின்னர் லாப தொகையை எடுக்க முயற்சி செய்யும்போது செயலியை தவறாக உபயோகப்படுத்தி விட்டீர்கள், இதனால் லாப தொகையை பெற மேலும் லட்சக்கணக்கில் முதலீடு செய்தால்தான் பெற முடியும் என நிபந்தனை விதிக்கின்றனர். பின்னர், செயலி பயன்படுத்துபவர்களிடம் அதிக பணம் பெற்று ஏமாற்றுகின்றனர். படித்து வேலை தேடி கொண்டிருப்பவர்கள், வேலையில் இருப்பவர்கள், மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோரிடம் அதிகளவில் மோசடி நடந்து வருகிறது.
இந்தாண்டு தாம்பரம் சைபர் கிரைம் பிரிவில் மட்டும் 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. இதில் 20 கோடி ரூபாய் வரை இழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, சைபர் கிரைம் நடவடிக்கை மூலம் 5 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, இழந்த பணத்தை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற டெலிகிராம் செய்திகளை நம்ப வேண்டாம். தேவையற்ற லிங்க்களை ஓபன் செய்ய வேண்டாம். இதுபோன்ற புகார்கள் இருந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் எண்ணிற்கும், https//:www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.
The post அதிகரிக்கும் மோசடி செல்போனில் வரும் தேவையற்ற லிங்க்களை ஓபன் செய்ய வேண்டாம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.
