இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘எங்களது விடுதியில் சமையலர், காவலாளி என யாரும் இல்லை. இதனால் காப்பாளர் தனது வீட்டில் 3 நேரத்திற்கான உணவுகளை தயார் செய்து விடுதிக்கு கொண்டு வருவார். கடந்த 3ம் தேதி கொண்டு வரப்பட்ட உணவை சாப்பிட்டு விட்டு பாக்கி உணவை 3 பேர் கொட்டினர். உணவை கொட்டியது யார் என காப்பாளர் கேட்டபோது யாரும் உண்மையை கூறவில்லை. இதையடுத்து அவர் எங்களுக்கு தண்ணீர் கூட தர முடியாது. தாகம் எடுத்தால் கழிவறையில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்து குடிக்குமாறு கூறினார். பின்னர் அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு சென்று விட்டார். இதனால் குடிக்க தண்ணீர் இல்லாமல் கழிவறையில் உள்ள குழாயில் தண்ணீரை பிடித்து குடித்தோம்’’ என்றனர். சைல்டுலைன் அதிகாரிகள், ‘‘ மாணவர்களிடம் நடத்திய விசாரணை யை அறிக்கையாக தயார் செய்து கலெக்டரிடம் வழங்க இருக்கிறோம்’’ என தெரிவித்தனர்.
The post உணவை கொட்டியதால் தண்டனை அரசு விடுதி அறையில் மாணவர்கள் சிறைவைப்பு: கழிவறை தண்ணீரை குடித்ததாக புகார்; காப்பாளரிடம் அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.
