பெரம்பலூர் நீதிமன்றத்தில் இன்று மருத்துவ பரிசோதனை முகாம்

 

பெரம்பலூர்,நவ.9: பெரம்பலூர் நீதிமன்றத்தில் இன்று (9ம்தேதி) மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று (9ம் தேதி) காலை 9:45 மணியளவில்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து, தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

The post பெரம்பலூர் நீதிமன்றத்தில் இன்று மருத்துவ பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: