பெரியவளையம் கிராம அரசுப்பள்ளி, நியாய விலைக் கடையில் எம்எல்ஏ ஆய்வு

 

ஜெயங்கொண்டம், நவ.8: ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பெரியவளையம் கிராமத்தில் பள்ளி மற்றும் நியாய விலை கடைகளில் எம்எல்ஏ ஆய்வு செய்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, பெரியவளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நியாயவிலைக் கடை மதிய உணவுக்கூடம் ஆகியவற்றில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆய்வு செய்தார், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறதா என்றும் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாப்பிடும் மதிய உணவை சாப்பிட்டு பார்த்து மேலும் சுவை மிக்கதாகவும் பள்ளி மாணவர்கள் மாணவிகள் விரும்பும் வகையிலும் வழங்க அறிவுறுத்தினார். மற்றும் அருகிலுள்ள நியாய விலைக்கடையை ஆய்வு செய்தார். அப்போது நியாய விலை கடையில் சேதமடைந்து இருந்த கட்டிடத்தில் தரைகளை சீரமைக்க கோரி கூட்டுறவுத்துறைக்கு அறிவுறுத்தினார்.

The post பெரியவளையம் கிராம அரசுப்பள்ளி, நியாய விலைக் கடையில் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: