இதையடுத்து ஆவடி சரக ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில், துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ராஜாராபர்ட் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் குற்றப்பிரிவு எஸ்ஐ பழனிவேல் கொண்ட போலீசார், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, 2 வாலிபர்கள் பெண்கள், ஆண்களை மிரட்டி செயின், செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து மீஞ்சூர் காவல்நிலையம் கொண்டுவந்து விசாரணை நடத்தினர். இதில், சென்னையை சேர்ந்த வாசு (25), சத்யா (22) என்பது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து செல்போன், செயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
The post மீஞ்சூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.
