ஆப்கானிஸ்தான் 7 போட்டியில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கான ரேசில் நீடிக்கிறது. ஆப்கான் வீரர்களும் அடுத்த 2 போட்டியிலும் வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் உள்ளனர். முஜீப், முகமது நபி, ரஷித் கான், நூர் அகமது ஆகியோரடங்கிய சுழல் கூட்டணி, ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். ரன் குவிப்புக்கு சாதகமான வான்கடே ஆடுகளத்தில் வார்னர், மார்ஷ், மேக்ஸ்வெல், ஹெட் ஆகியோரை ஆப்கானால் கட்டுப்படுத்த முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தான் கடைசியாக விளையாடிய 5 போட்டியில் 4 வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ளது. அதே சமயம் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 5 வெற்றிகளை வசப்படுத்தி அருமையான ஃபார்மில் உள்ளது. இரு அணிகளுமே வெற்றிக்கு குறி வைப்பதால், ஆட்டம் மிகவும் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆப்கானிஸ்தான்: ஹஷ்மதுல்லா ஷாகிதி (கேப்டன்), அப்துல் ரகுமான், அஸ்மதுல்லா உமர்ஸாய், பஸல்லாக் பரூக்கி, இப்ராகிம் ஸத்ரன், இக்ரம் அலிகில், முகமது நபி, முஜீப் உர் ரகுமான், நஜிபுல்லா ஸத்ரன், நவீன் உல் ஹக், நூர் அகமது, ரகுமானுல்லா குர்பாஸ், ரகமத் ஷா, ரஷித் கான், ரியாஸ் ஹசன்.ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஷான் அப்பாட், அலெக்ஸ் கேரி, கேமரான் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லாபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஸம்பா.
The post ஆஸ்திரேலியா – ஆப்கான் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.