இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து, வங்கதேசம், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றை எட்டியுள்ளது. மீதமுள்ள 2 அணிகள் இன்னும் அரையிறுதிக்கு தகுதிபெறவில்லை.
இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 தோல்வி மற்றும் 2 வெற்றி பெற்று அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. மேலும், கடந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 55 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால், இலங்கை அணிக்கு எதிராக அந்நாட்டு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உலகக்கோப்பையில் தொடர் தோல்வி எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தை கலைத்து இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக தலைவராக அர்ஜுனா ரணதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர். ஊழல், நிதி முறைகேடு, சூதாட்டம் மற்றும் வீரர் ஒழுங்கீனம் எனக் குறிப்பிட்டு ஐசிசிக்கு இலங்கை அமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post உலக கோப்பையில் தொடர் தோல்வி: கிரிக்கெட் வாரியத்தை கலைத்த இலங்கை அரசு! appeared first on Dinakaran.
