இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதால் சோவியத் ரஷ்யாவை போல் அமெரிக்கா உடையும்: ஹமாஸ் மூத்த தலைவர் பகீர் பேட்டி


பெய்ரூட்: சோவியத் ரஷ்யாவை போன்று ஒருநாள் அமெரிக்கா சரியும் என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி அலி பராகா கூறினார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இதனால் பாலஸ்தீனத்தில் கொடூர தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி அலி பராகா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘சோவியத் ரஷ்யாவை போன்று அமெரிக்கா உடையும். அமெரிக்காவின் அனைத்து எதிரி நாடுகளும் ஒன்று சேர்வதற்கான ஆலோசனைகள் நடக்கிறது. அவர்கள் ஒன்றாக சேர்ந்து போரில் ஈடுபட்டால், அமெரிக்காவிற்கு பெரும் இழப்பு ஏற்படும்.

அமெரிக்கா ஒரு சக்திவாய்ந்த நாடாக இருக்காது. அமெரிக்காவை தாக்கும் வடகொரியாவை பாராட்டுகிறேன். அமெரிக்காவைத் தாக்கும் உலகில் ஒரே ஒருவராக வடகொரியா தலைவர் உள்ளார். அமெரிக்காவை தாக்கும் திறன் வட கொரியாவுக்கு உள்ளதால், எங்களின் கூட்டணிக்கு வட கொரியாவும் வரலாம். ஹமாஸ் தூதுக்குழு சமீபத்தில் ரஷ்யாவின் மாஸ்கோவிற்குச் சென்றது. அதேபோல் சீனாவுக்கும் செல்கிறது. அமெரிக்காவை தாக்கும் திறன் ஈரானுக்கு இல்லை. இந்தப் போரில் ஈரான் தலையிட்டால், அது சியோனிச அமைப்பையும், அமெரிக்க தளங்களையும் தாக்கும். ஆனால் ஈரானிடம் போதிய ஆயுதங்கள் இல்லை’ என்றார்.

The post இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதால் சோவியத் ரஷ்யாவை போல் அமெரிக்கா உடையும்: ஹமாஸ் மூத்த தலைவர் பகீர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: