நீதிபதி வீட்டில் 20 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது

 

ஏற்காடு, நவ.4: ஏற்காட்டில் நீதிபதி வீட்டில் 20 பவுன் திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஏற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் சரவணன். இவரது மனைவி லட்சுமி பிரபா (43). இவர் நீதிமன்றத்தில் கடந்த 30ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிகழ்ச்சிக்கு வீட்டு பீரோவில் வைத்திருந்த 20 அரை பவுன் தங்க நகைகளை போட்டுக்கொண்டு சென்று விட்டு அடுத்த நாள், நகைகளை மீண்டும் பீரோவில் வைத்துள்ளார். அதை தொடர்ந்து கடந்த 30ம் தேதி பீரோவை திறந்து நகைகளை பார்த்த போது, பீரோவில் வைத்த நகைகளை காணவில்லை என்றும், நகைகளை கண்டுபிடித்து தருமாறு குறிப்பிட்டிருந்தார்.

புகாரை தொடர்ந்து, ஏற்காடு போலீசார் கைரேகை நிபுணர்களுடன் நீதிபதி வீட்டில் சோதனை செய்தனர். அதில், நேற்று முன்தினம், நீதிபதி வீட்டில் பணிபுரியும் சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரம் மனைவி (30) என்பவர், அரிசி பாத்திரத்தில் 14 பவுன் இருந்ததாக கூறி நீதிபதி மனைவியிடம் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து வேலைக்கார பெண் சுகன்யாவிடம் ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் தான் நகையை திருடியது தெரிய வந்தது. போலீசார் விசாரணை நடத்தியதில், பயந்துபோய் 14 பவுன் நகையை திருப்பி கொண்டு வந்து அரிசி பாத்திரத்தில் வைத்ததாகவும், மீதி 6 பவுன் நகையை தான் எடுத்துக்கொண்டதாக கூறி மீதி ஆறரை பவுன் நகையை திருப்பி கொடுத்துள்ளார். சுகன்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நீதிபதி வீட்டில் 20 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: